Tuesday, May 22, 2018

#savetuticorin


படிக்காத ஆண், பெண் அரசியல்வாதிகளும் மக்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்..
மெத்த படித்த ஆண், பெண் COLLECTORSகளும் மக்களுக்கு எதிராகத்தான் இயங்குகிறார்கள்...

இயக்குபவனை இனங்கண்டு நம் இனம் காப்போம்...

Monday, May 21, 2018

#நிபா

எனது எச்சிலிலோ சிறுநீரிலோ எந்த தவறும் இல்லை..

மனிதனின் மூளையில் சுரக்கின்றன லாபவெறி என்ற பேராசை சுரப்பி தான் இந்த நிபா வைரஸ் தோன்ற காரணம்..

இப்படிக்கு,
வௌவால்கள்.. 

Sunday, May 20, 2018

புதுமொழி 1

ஆரியமும் திராவிடமும் ஒண்ணு... இத அறியாத தமிழனின் வாயில மண்ணு.. 

எதிர்வினை வேண்டாம்.. மறுவினை ஆற்றுவோம்..

அரசியல்வாதிகள் மக்களை திட்டிக்கொண்டிருப்பதில்லை.. அவர்களின் கவனம் எல்லாம் கொள்ளை அடிப்பதில் கச்சிதமாக இருக்கின்றன..
மக்கள் நாம் தான் நம் கவனம் எல்லாம் சிதறவிட்டு அரசியல்வாதிகளை திட்டிக்கொண்டு திரிகின்றோம் , நேரத்தை விரயம் செய்கின்றோம்..

நாம் போராடும் விதம் மாற வேண்டும்.. நாம் எதிர்வினை ஆற்றாமல் .. மறுவினை ஆற்ற வேண்டும்..

நாம் ஊடகத்தின் பின் செல்லாமல்.. நம்மை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும்...

TRP rateஐ குறைத்து காட்டி அவ்வப்போது வணிகர்களுக்கு அச்சுறுத்த வேண்டும்..

முடிந்த வரை தற்சாற்பு வாழ்க்கை வாழ வேண்டும்..
Corporate பொருட்களை ,சேவைகளை தவிர்த்து
நமது பொருளாதாரம் நமக்குள்ளயே சுழல வேண்டும்..

மேலும் வேறு என்னவெல்லாம் செய்யலாம் என வாசகர்கள்  பின்னூட்டத்தில் பதிவிடலாம்

Saturday, May 12, 2018

சன் டிவி எனும் சாத்தான்

சன் தொலைக்காட்சி ஆரம்பித்து 25 வருடம் ஆகி விட்டது... கால் நூற்றாண்டில்... ஒரே ஒரு நாள் கூட ஏதேனும் ஒரு கோரிக்கைக்காக "பந்த்" என்ற பெயரில் ஒளிபரப்பை நிறுத்தியதாக தெரியவில்லை.. மெகா சீரியல்களில் பெண்கள் மற்றும் குடும்பம் சம்மந்தப்பட்ட கதைகள்தான்... ஒரு சில தொடரை தவிர மற்றவை எல்லாம் நம் வீட்டு ஹாலை நோக்கி வரும் குப்பைகள்... திமுக அழிந்தாலும் SUNTV அழியாது என்று ஆகிவிட்டது.. வணிகர்களின் ராஜதந்திரம் இம்மிபிசகாமல் இந்த தொலைக்காட்சியால் வெற்றிகரமாய் நடந்து கொண்டு இருக்கிறது... 

சூரியனின் பெயரை கொண்டு நம்மை சூழ்ந்த ஒரு மா இருள் .. 

Friday, May 11, 2018

NEET Vs WTO

''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...?''

''உலக வர்த்தக அமைப்பு சில வாக்குறுதிகளை இந்திய அரசிடம் பெற்றுள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''

Senior Professor of Delhi & Education activist - Anil Sadagopal

Neet is not a tamilnadu students problem... Its a problem for india from WTO..

विश्व व्यापार संगठन (WTO) से पूरे भारत के लिए यह एक समस्या है..

COURTESY: VIKATAN & BBC

#Neet
#WTO

#நெடுவாசல்

#நெடுவாசல் மக்களுக்கு வாழ்த்துகள்..

கொண்டாட பட வேண்டிய செய்தி... ஆனால் முழுமையான வெற்றியா, உறுதியான பின்வாங்கலா என்ற சந்தேகங்களால் அமைதியாக கடந்து போய்க் கொண்டு இருக்கிறது..

காற்றினில் ஊழி கேட்டதுண்டா!?

மரத்தை நட்டுவிட்டு உயிர் சூழலை பாதுகாத்து விடலாம் என்று இயங்கி கொண்டு இருக்கும் மனிதர்களை பார்க்கும் போது... சிரிப்பதா அழுவதா என தெரிய வில்லை...

நடுக்கடலில் ஏது மரங்கள் - பாலை வனத்தில் ஏது மரங்கள்..

மீனவனோ ஒட்டகம் மேய்பவனோ oxygen cylinder ஏந்தியது உண்டா!?

 ஆனால் டெல்லியில் ஏன் oxygen cylinderகளின் பயன்பாடு தேவைப்பட்டது...

நீரை உருவாக்க முடியாது... ஆனால் மாசு படுத்தி நாசம் செய்ய முடியும்... அதே போலத்தான் காற்றும் அதற்குள் இருக்கும் உயிரணுக்களும் உருவாக்க முடியாது.. நாம் மாசுபடுத்தி நாசம் செய்து வருகிறோம்.. மரம் வளர்த்தல் என்பது ஒரு வைத்தியம் .. அது தீர்வல்ல... தொழிற்சாலைகள் மீது மட்டுமா குற்றம்.. சொகுசாக வாழ்கிறேன் என்று காற்றை கெடுகின்ற ஒவ்வொரு குடும்ப தலைவன்,தலைவி,குழந்தைகள் என அனைவருமே பொறுப்பு.. நாம் மாற விட்டால் காற்று மாறிவிடும்... ஊழி அரங்கேறும்.. இதுவரை இந்த பூமி கண்டிராத ஒரு அழிவாக அது இருக்கும்..

ம.செந்தமிழன் உரைலிருந்து..