Thursday, August 12, 2010

What is a public page?

What is a public page?

Monday, July 26, 2010

ஏன் நாம மட்டும் இப்படி இருக்கோம் .... ?!

உலகில் உள்ள எல்லா தமிழர்க்கும் வணக்கமுங்க .. முக்கியாம தமிழ் படிக்க தெரிஞ்ச தமிழர்க்கு என் சிறப்பு வணக்கமுங்க ...

வலைப்பூல இது என்னோட முதல் பதிவு .. அதனால கொஞ்சம் முன்ன பின்ன இருந்தாலும் ... மன்னிச்சும் கொஞ்சம் கண்டிச்சும் விட்ருங்க ...

கடந்த சில மாசமா எனக்குள்ள ஓடிட்டு இருக்கற .... எல்லா கேள்விக்கும் ஒரே விடையை தேடிட்டு இருக்கறனாலதா இந்த பதிவு ...

பெருசா ஒன்னும் இல்லிங்க.. ஒரு தலைவர் சொன்னார் "எத்தன இனம் ஒன்று பட்டாலும் ... தமிழ் இனம் மட்டும் ரெண்டுபட்டே இருக்குமுன்னு "... இது நூறு சதவிகித உண்மைன்னு ஒரு வாரத்துல நடந்த மூணு சம்பவத்துல விளங்கிஞ்சுங்க ....

சம்பவம் 1 : என் கூட தமிழர் ,மலையாளி ,பஞ்சாபி,மராத்தி,ஸ்பானிஷ்(spanish) இன்னு எல்லாரும் வேல பாக்குறாங்க, ..மலையாளி பையன் ஒரு மின்னஞ்சல் (forward mail) பாத்துட்டு இருந்தான் .. அதுல ஒரு சீனா ராணுவ காரன் திபெத் ஊடக பொண்ண சுட்டு தள்ளர மாதிரி ஒரு 4,5 புகைபடங்க இருந்திச்சி .. இத பாருங்கன்னு சொல்லி என்கிட்டயும்
மத்தவங்ககிட்டயும் காமிச்சான் .... எல்லாரும் அப்டியே ஷாக் ஆயிட்டாங்க ... ஒரு பொண்ணுன்னு பாக்காம இப்டிய பண்றதுன்னு ... எனக்கு அதுல எந்த ஒரு அதிர்ச்சியும் கேள்வியும் வரல ... அவங்கள பாத்து கேட்டேன் ... நீங்க ஆள சுடற மாதிரி பாத்ததில்லையானு ... இல்லன்னு சொன்னாக ... நா உடனே ஈழத்துல நடந்த சில படுகொலை காணொளிகள (வீடியோ) காமிச்சேன் ... அத கொஞ்ச நேரம் கூட அவங்களால பாக்க முடியல .. இன்னிக்கி வரைக்கும் இத பத்தி அவங்களுக்கு எதுவும் சரியா தெரியலைன்னு தெரிஞ்சது ... அப்ப பஞ்சாபி காரன் என் கிட்ட சில சாதாரணமான கேள்விய கேட்டான் ...

இது எங்க இப்டி நடக்குது ?
.... in srilanka
யார இப்படி சுடறாங்க ???
.... tamil people
தமிழ்நாட்ல நீங்க எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க ??
........ actually .............

ப்பாகல் லோக்... எங்க ஆளுகள மட்டும் இந்த மாதிரி சுட்டுக்கொன்னா .. உலகத்துல எங்க இருந்தாலும் சரி , இதுக்கு ஒரு முடிவு கட்டிட்டுதா பஞ்சாபிங்க வேற வேலைய பாப்போம் .....

சம்பவம் 2 : ஸ்பெயின் உலக கோப்பை வாங்கினதுக்கு.. கூட இருந்த குவதாமளா நாட்டுக்காரனுக்கும்,பெரு நாட்டுக்காரனுக்கும் ரொம்ப சந்தோஷம் ... தன்னோட நாடு ஜெயச்ச மாதிரி .. நா ஏன்னு கேட்டே ... எப்டியோ ஸ்பானிஷ் ஆளுங்க கோப்பைய வாங்கிடோமுல்லன்னு சொன்னாயங்க...

சம்பவம் 3 : என் நண்பன் ஒருத்தன் செல்பேசில அழைப்பு ... மச்சா இந்த வேலைய விட்றேண்டா ...
ஏன்டா ...
என்னால நம்ம ஆளுங்க தங்குற இடத்தலயு வேல பாக்குற இடத்தலயும் நமக்குள்ளயே பண்ற அரசியல் அக்கபோரு தாங்க முடியலடா... அதா ... தமிழ் ஆளுங்க அதிகம் இல்லாத இடமாப்பாத்து வேலைக்கு போறேன்டா..